வகைப்படுத்தப்படாத

சூடானில் கடும் மழை – 62 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சூடானில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 62 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சூடானில் கடந்த ஜூலை மாதம் முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சூடானில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நீடிக்கும் அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Spider-Man: Far From Home චිත්‍රපටය ඇ.ඩො මිලියන 600ක් උපයයි.

ரயில் பாதையில் செல்லுதல் தண்டனைக்குரியது- முற்றுகை நடவடிக்கை ஆரம்பம்

Lanka IOC revises fuel prices