சூடான செய்திகள் 1

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

(UTCNEWS|COLOMBO) -நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளை கணக்கெடுப்பை கருத்திற் கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் மூடப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள சுமார் 250 வனப் பிரதேசங்கள் குறித்த திணைக்களத்தினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஹசினி சரச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பிற்காக சுமார் 80 மில்லியன் ரூபா வரை செலவாகுமென்று வனஜீவராசிகள் திணைக்களம் கணக்கிட்டுள்ளது.

Related posts

தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டு கொண்ட நபர்

அரசாங்க வைத்தியசாலையாகும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

editor