கிசு கிசு

கோட்டாபய சவாலுக்குரிய ஒரு வேட்பாளர் என்பது கசப்பான உண்மை – ஹர்ஷ

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்பது சவாலுக்குரிய ஒரு வேட்பாளர் என்பது கசப்பான உண்மை என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

நேற்று(21) இரவு அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் இரவு விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்று இருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், “அவ்வாறு இருக்க அவருக்கு பாரிய தொகையான வாக்குப் பலமும் உள்ளது என்பதும் உண்மை. எனினும், அந்த சவாலை முறியடிக்கும் வகையில் நாம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

பிரபல நடிகையை நடுரோட்டில் வைத்து கதற விட்ட ரவுடிகள்

ராஜபக்ஷ குடும்பத்தில் மற்றுமொருவர் ஓய்வு…

நாட்டின் நிலைமை குறித்து அறிவிக்கவிருந்த ஊடக சந்திப்பு இரத்து