கிசு கிசு

வருமான வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலையில் இடம்; வறிய குடும்பத்தின்?

(UTVNEWS | COLOMBO) -வருமான வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்கத்துக்கு வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொள்ள கல்வி அமைச்சின் கவனம் திரும்பியுள்ளது.

அவ்வாறான பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான புதிய வரையறைகளை உருவாக்கும் செயற்பாட்டில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்றதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

வலுக்கட்டாயமாக முத்தமிட்ட பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவன அதிகாரி…

இலங்கையில் சடுதியாக அதிகரித்த ‘பாலியல் தொழிற்றுறை’

அகில தனஞ்சயவின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடையுமா?