சூடான செய்திகள் 1

புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர்; ஐ.தே.க தீர்மானமிக்க பேச்சுவார்த்தை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் இன்றைய தினம் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் கருஜயசூரிய அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரில் ஒருவரே வேட்பாளராக வேண்டும் என்பதே சஜிதை எதிர்க்கும் தரப்பின் கோரிக்கையாக உள்ளது. சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவு கட்சிக்குள் வலுபெற்றுள்ள சூழலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன.

Related posts

எரிபொருள் விலை நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும்

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்