சூடான செய்திகள் 1விளையாட்டு

தோனியை தேர்வு செய்தவர் தற்கொலை

(UTVNEWS|COLOMBO) -இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டு இறந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரோடு பயணித்த சக கிரிக்கெட் வீரர்கள் விவிஎஸ் லக்‌ஷ்மன், அனில் கும்பளே, ஸ்ரீகாந்த் ஆகியோரும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் வி.பி.சந்திரசேகருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

1980களில் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய வி.பி.சந்திரசேகர், இடது கை பேட்ஸ்மேன் ஆவார். அனைவராலும் வி.பி. என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

முன்னாள் இந்திய தேர்வு குழு தலைவராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான மனு 30 ஆம் திகதி விசாரணை

70 பேருக்கு இடமாற்றம்…

பிரதமர் இன்று(28) கிளிநொச்சி விஜயம்