சூடான செய்திகள் 1

இலங்கையர் சென்னையில் மாயம்

(UTVNEWS|COLOMBO) – இலங்கையர் ஒருவர் சென்னையில் காணாமற் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

26 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவரே கடந்த மாதத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த இளைஞன் இலங்கையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில், பின்னர் தனது உறவினர்களை சந்திப்பதற்காக சென்னை நோக்கி சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த தனது மகன், உறவினர் வீட்டுக்கு சென்றடையவில்லை என அவரது தாய்க்கு தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞனை தேடி சென்னை விமான நிலைய பொலிஸார் சிசிரிவி கெமரா காட்சிகளை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

விசாரணைகளின் பின்னர் நதிமல் பெரேரா விடுவிப்பு

அடை மழை காரணமாக வீதி தாழிரக்கம்

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று