சூடான செய்திகள் 1விளையாட்டு

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து

 

(UTVNEWS|COLOMBO) –  இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி  ஆபாரமாக பந்து விச்சில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இலங்கை அணியின் பந்துவீச்சில் அகில தனஞ்சய 80 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5விக்கெட்டுக்களை, சுரங்க லக்மல் 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும்வீழ்த்தியுள்ளனர்.

நியூஸிலாந்து அணி சார்பில் ஜீட் ரவல் 33 ஓட்டத்துடனும், டோம் லெதம் 30 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் எதுவித ஓட்டமின்றியும், ஹென்றி நிக்கோலஷ் 42 ஓட்டத்துடனும், வெல்டிங் ஒரு ஓட்டத்துடனும் ரோஸ் டெய்லர் 86 ஓட்டத்துடனும், மிட்செல் செண்டனர் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

Related posts

ஜப்பான் நகர அபிவிருத்தி திட்டமிடல் முறைமையில் கண்டி நகரம் அபிவிருத்தி

பிரித்தானிய மஹாராணியின் பிறந்தநாளையொட்டி கௌரவிக்கப்படவுள்ள இலங்கையர்

வழமைக்கு திரும்பியது ருகுணு பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள்