சூடான செய்திகள் 1

களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்

(UTVNEWS|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதால் அதனை அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக புளத்சிங்கள, பாலிந்தநுவர, கிரியெல்ல, இங்கிரிய, மதுராவல ஆகிய பிரதேச செயலகங்களில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

களுகங்கையில் இரத்தினபுரி நீர் அளவிடும் இடத்தில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தாலும், எல்ல மற்றும் மில்லகந்தை நீர் அளவிடும் இடங்களில் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

வணக்கத்திற்குரிய பல்லத்தர ஶ்ரீ சுமனஜோதி தேரர் காலமானார்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்