சூடான செய்திகள் 1

மத்தள சர்வதேச விமான நிலைய சேதம் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பு..

(UTVNEWS | COLOMBO) – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் கட்டிடத்தில் நெல் சேமித்து வைப்பதால் அதன் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகளும், அரச நிறுவனங்களின் மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காவற்துறைப் பிரிவின் அதிகாரிகளும் சமீபத்தில் மத்தளை விமான நிலையத்தை ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த வாரம் கையளிக்கப்படவுள்ளதாக, குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளன

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்

இலங்கை மற்றும் சீனாவிற்கு புகழாரம்; சீனாவை நெருங்கும் இலங்கை