சூடான செய்திகள் 1

மதவாச்சி – அனுராதபுரம் வீதியில் கோர விபத்து ; மூவர் பலி

(UTVNEWS | COLOMBO) -அனுராதபுரம் – மதவாச்சி பிரதானவீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் திசையில் பயணித்து அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலைக்கு தற்காலிக பூட்டு

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் இன்றிலிருந்து ஆரம்பம்