சூடான செய்திகள் 1

கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை என எடுக்கவுள்ளதாக அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

எதுவித சட்ட அடிப்படைகளும் இன்றி, மக்களையும், அரசாங்கத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் இவ்வாறான நிறுவனங்களின் செயற்பாட்டை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென அவர் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா அத்தியாவசிய உணவு பொருளாக உள்ள நிலையில் விலையை அதிகரித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் நாளை…

‘டிகிரி சக்தி’ பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ் தோட்டசிறார்களுக்கு பிஸ்கட்

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு