சூடான செய்திகள் 1

செல்பி எடுக்க முற்பட்ட இருவர் கடலில் விழுந்து மாயம் காலியில் சம்பவம்

(UTVNEWS | COLOMBO) – காலி – றூமஸ்ஸல கடற் பரப்பில் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 04 இளைஞர்கள் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் காணாமல் போன இருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில்இரு இளைஞர்களையும் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காணமல் போனவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கினிமெல்லகஹ, தெலிகட பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

குழந்தைகளின் வாகனத்தில் ஏறிய கெஹலியவால் சர்ச்சை

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு…