சூடான செய்திகள் 1

ஓமந்தையில் நிலக்கீழ் வெடிகுண்டுகள் மீட்பு

(UTVNEWS | COLOMBO) – வவுனியா, ஓமந்தை, பழைய முகாமிற்கு அருகில் இருந்த காணி ஒன்றில் இருந்து ஏழு நிலக்கீழ் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியில் விவசாய வேலைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த நிலக்கீழ் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்தில் நிலக்கீழ் வெடிகுண்டுகள் மேலும் உள்ளனவா என தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் கைது

மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் நீர் விநியோகம் தடைப்படலாம்…

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில்…