சூடான செய்திகள் 1

உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தம்புள்ளை லென் விஹாரை (video)

(UTVNEWS | COLOMBO) -வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ளை லென் விஹாரை உலக மரபுரிமை பட்டியலிலிருந்து நீக்கிக் கொள்ள முடிந்திருப்பதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல தெரிவித்துள்ளார்.

விஹாரையில் நிலவிய குறைபாடுகள் காரணமாக உலக மரபுரிமை அமைப்பு இது தொடர்பிலான பட்டியலில் உள்வாங்கியிருந்தது.

குறித்த விஹாரை உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமையானது. இலங்கைக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும் என்று தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அஸர்பைஜானில் இடம் பெற்ற 43வது உலக உரிமை கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட தனது தலைமையிலான குழு இது தொடர்பில் சமர்ப்பித்த விடயங்களை இக்குழுவில் கலந்து கொண்ட 42 நாடுகளின் பிரதிநிதிகளின் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வாதிட நாளை இரண்டு கூட்டங்கள்

புத்தளத்தில் திடீர் வெடிப்பு சம்பவம்

கைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை!- அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம் (VOICE)…