சூடான செய்திகள் 1

அமைச்சுப் பதவிகளை மீளவும் கையேற்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் இல்லை

(UTVNEWS | COLOMBO) – அமைச்சுப் பதவிகளை மீளவும் கையேற்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கூடி கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அங்கத்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்பதற்கு இன்னும் காலம் எடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

எரிந்த நிலையில் சடலம் மீட்பு