சூடான செய்திகள் 1

ஐ.தே.க. – கூட்டமைப்பு அரசு என்றே கூற வேண்டும் – தயாசிறி

(UTV|COLOMBO)- தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசாங்கத்தால் செயற்பட முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். .

மேலும் கருத்து தெரிவித்த அவர், “கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அபிவிருத்தி தேவைகளுக்கான நிதியாக 50 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசாங்கத்தால் செயற்பட முடியாது.

Related posts

விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது

மீன்பிடிக்கு சென்றவர் கடலில் விழுந்து மாயம்

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு