சூடான செய்திகள் 1

புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பு

 

(UTV|COLOMBO)-  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளர் அனுஷா சிவாராஜ், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுசெயலாளர் இ.கதிர் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுசெயலாளர் நடேசன் நித்தியாதந்தா ஆகியோர் இணைந்துள்ளனர்.

இவர்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபாகணேசனுக்கும் இடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர், மாகாண அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்

கல்வியியல் கல்லூரிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு

சிலி தலைநகருக்கு அவசர நிலை பிரகடனம்