சூடான செய்திகள் 1

இலங்கையில், அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லை -அலேனா டெப்பிளிஸ்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறைமைக்கு எவ்விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படமாட்டாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலேனா டெப்பிளிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாதெனவும், தேசிய தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டார்.

அமெரிக்க இராணுவ முகாம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுமென்று ஊடகங்களின் ஊடாக போலியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் நடுநிலை தன்மைக்கு பாதிப்பு ஏற்பட மாட்டாது என்று அஸ்கா ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் பயிற்சி, இயங்கை அனர்த்தங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் பொருட்களையும், சேவைகளையும் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு மாத்திரமே கிடைக்கின்றது.

அமெரிக்க இராணுவம் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் சேவைகளுக்காக கட்டணங்களை செலுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மைகள் கிடைக்கும். இது புரிந்துணர்வு, இணக்கப்பாடு மாத்திரமாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ளவது இலகு -பிரதமர்

எதிர்வரும் 2023 வரை இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை [VIDEO]

அலோசியஸ் மற்றும் கசுன் மீண்டும் விளக்கமறியலில்