வகைப்படுத்தப்படாத

வட கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு

(UTV|COLOMBO) – கொரியா நாட்டின் எல்லைப் பகுதியில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு பிறகு, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவிவந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.

இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக டிரம்பும், கிம் ஜாங் அன்னும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்துப் பேசினர். ஆனால் எதிர்பாராத வகையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கொரியா நாட்டின் எல்லைப் பகுதியில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க உள்ளனர் என தென் கொரியா இன்று அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

තිරිඟු පිටි සඳහා රජයෙන් මිල සූත්‍රයක් ?

Suspect arrested while transporting 203kg of Kerala Ganja

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு!