சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

(UTV|COLOMBO) இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

 

 

Related posts

பெரும்பாலான மாகணங்களில் பலத்த மழை…

மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியில் நீடிக்க முடியுமா?- முஜிபுர் ரஹ்மான்

இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையம்