சூடான செய்திகள் 1

மக்களை மீள்குடியமர்த்த 21 பில்லியன் ரூபா நிதி

(UTV|COLOMBO) மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக அந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேறிய மக்களை வேறு இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் 21 . 5  பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

பாதுகாப்பான இடங்களில் 15 ஆயிரத்து 25 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக 5 ஆண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கேகாலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் 16 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திரகே தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர விளக்கமறியலில்

பிரதமர் வடக்கிற்கு விஜயம்

விடுமுறைக்கு வீட்டிக்குச் சென்ற இளைஞர் சிறுமிக்கு செய்த காரியம்….