சூடான செய்திகள் 1

அமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்க இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனையை விலக்கிக் கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அமெரிக்க அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் இலங்கையில் இருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தது.

நேற்றைய தினம் இலங்கை மீதான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இலங்கை மீதான பயண ஆலோசனை முன்னர் இருந்த Level 3 இல் இருந்து தற்பொழுது Level 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

Related posts

வீடியோ | பொரள்ளை துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

editor

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு