வகைப்படுத்தப்படாத

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை

(UTV|AMERICA)  அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தநிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அதை திரும்ப பெற்றார். எனினும் ஈரான் மீது கோபத்தில் இருக்கும் அமெரிக்கா, அந்த நாட்டுக்கு ஏதாவது தண்டனை விதிக்க வழி தேடி வருகிறது.இந்தநிலையில் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா நேற்று விதித்தது. மேலும் ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையெழுத்து இட்டார்.

 

 

 

Related posts

இந்தோனேசியாவில் மீண்டும் நிலடுக்கம்…

UNP Presidential candidate will be revealed in 2-weeks

மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்