வகைப்படுத்தப்படாத

ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு

(UTV|INDIA) நேற்று முதல் பெய்த கடும் மழையுடனான காலநிலை சீர்கேடு காரணமாக இந்திய – ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுதவிர, 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் சமய நிகழ்வொன்றிற்காக பொதுமக்கள் ஒன்று கூடியிருந்த வேளையிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதுடன் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாவும் நட்டயீடாக வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

නුවන් කුළසේකර ජාත්‍යන්තර ක්‍රිකට් පිටියට සමුදෙයි

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

Strong winds to reduce over next few days