வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)- இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா பகுதியில் நேற்று தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் உட்பட 30 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிச்சத்தத்தை தொடர்ந்து உள்ளே குவித்து வைக்கப்பட்டிருந்த தீப்பெட்கள் அனைத்தும் வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

நாளை முதற்கடற்கலம் வெள்ளோட்டம்

PTL suspension extended

බියගම ප්‍රදේශයේදී කේරළ ගංජා සමඟ පුද්ගලයෙකු අත්අඩංගුවට