சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்கரைக்கு அப்பால் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனால் கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகமும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

இலங்கையில், 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும்!!