சூடான செய்திகள் 1

நாளை மீண்டும் கூடவுள்ள விசேட தெரிவிக்குழு

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவிக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை(18) மீண்டும் விசேட தெரிவுக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது. பிற்பகல் 02 மணியளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பிரதிசபாநாயகர் தெரிவித்தார்.

இதன்படி நாளை நடைபெறவுள்ள விசேட தெரிவுக்குழு அமர்வின் போது மேலும் ஒரு அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

BREAKING NEWS – ருஸ்தி பிணையில் விடுதலை

editor

கிளப் வசந்த கொலை : 10 லட்சம் பெற்ற கடை உரிமையாளர்

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு