வகைப்படுத்தப்படாத

சோமாலிய ஜனாதிபதி மாளிகை அருகே கார் குண்டுவெடிப்பு

சோமாலியாவில் அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த அல் – ஷபாப் பயங்கரவாதிகள் பொலிஸார், பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அந்த நிலையில், சோமாலியாவின் தலைநகர் மொகாதீசுவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் பொலிஸார் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரைச் சென்று பொலிஸாரின் சோதனை சாவடி முன்பு நிறுத்தி வெடிக்க செய்தனர்.

குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்று சில மணி நேரத்தில்  மொகாதீசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்தது.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

இன்றும் பலத்த மழை:மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

இளவரசர் எட்வர்ட்டுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

Kalu Ganga rising to flood level