சூடான செய்திகள் 1

இன்று முதல் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO) அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளிலுள்ள 11 பாடசாலைகளை இன்று (13ஆம் திகதி) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற்கு, வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொசன் பூரணையை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி குறித்த பாடசாலைகள், எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.

 

 

 

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்

சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்கமறியல்

மாணவர்களுக்கு இரும்பு அடங்கிய உணவை வழங்க நடவடிக்கை