சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)  எல்ல – வெல்லவாய வீதியின் இராவணன் நீர்வீழ்ச்சி பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி சுமார் 350 மீற்றர் பள்ளத்தில் பாய்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

36 மற்றும் 38 வயதுடைய பெண்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெறும் போது முச்சக்கர வண்டியில் ஆறு பேர் பயணித்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு

2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்