சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் திங்களன்று திறப்பு

(UTVNEWS | COLOMBO) – நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, நடைபெறாது விடுபட்ட பாடசாலை நாட்களை ஈடு செய்வதற்கான தீர்மானங்கள் எதுவும் இதுவரை கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட வில்லை.

சிங்கள மற்றும் தமிழ் அரச பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாத விடுமுறைக் காலத்தில் அதனை ஈடு செய்வதற்கான யோசனைகள் பல தரப்பிலும் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் விடுமுறை வழங்கப்படுவதில்லையென்பதனால் மாற்று வழி முறையொன்று குறித்து யோசிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

கொட்டாஞ்சேனையில் கைதான தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களை விசாரிக்க அனுமதி

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்

பாண் விலை அதிகரிக்கப்படமாட்டாது…