சூடான செய்திகள் 1

நவீன கையடக்க தொலைபேசி, உபகரணங்களுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது  நீர்கொழும்பு ஏத்துகால பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் சீனப் பிரஜை உள்ளிட்ட மூவர், நீர்கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அலைபேசிகள் 420, பல்வேறு தொலைப்பேசி நிறுவனங்களுக்கு உரிய சிம் அட்டைகள், 17,400 மற்றும் இணையத்தள தொடர்புகளை ஏற்படுத்தும் உபகரணங்கள் (ரவுட்டர்) 60 மற்றும் அதி தொழிற்நுட்ப உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை