சூடான செய்திகள் 1

இன்று சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்

(UTV|COLOMBO) இன்று(06) தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே குறித்த இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உரைகள் மற்றும் காணொளிகளை பதிவேற்றி இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் பிரசாரங்களை மேற்கொண்டமையால் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பல தடவைகளில் நிபுணர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

Related posts

“அல ரஞ்சி” கைது

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

editor

தனியார் வகுப்புக்களுக்கு தடை