சூடான செய்திகள் 1

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா

(UTV|COLOMBO) அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

அலரி மாளிகையில் பிரதமருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இன்று(03) இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்

அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள் சமர்பிப்பு