கிசு கிசுசூடான செய்திகள் 1

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு,நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளை  மூடுவதற்கு, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, கலால் திணைக்கள ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில், மதுபானம் அருந்துபவர்களின் நடவடிக்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இத் தினங்களில் மதுபானசாலைகளை மூடுவதன் மூலம் சில பாரதூரமான நடவடிக்கைகளை கட்டுபடுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அனைத்து மருந்தகங்களை உடனடியாக மூடுமாறு அறிவித்தல்

மிளகு இறக்குமதி நிறுத்தம்

சாய்ந்தமருது மத்ரசா மாணவன் கொலை, மௌலவிக்கு மீண்டும் 14 நாட்கள் சிறை..!