சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டில் படிப்படியாக தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) காற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலை நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான மனு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்