சூடான செய்திகள் 1

அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ள அமெரிக்க உதவிச் செயலாளர்

(UTV|COLOMBO) அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான ராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் க்ளார்க் கூப்பர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தனது விஜயத்தை ஆரம்பித்த அவர் இந்தியா , இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மே 29 – ஜூன் 7 ஆம் திகதி வரை  செல்லவுள்ளார்.

உதவிச் செயலர் க்ளார்க் கூப்பர் இலங்கையில் இடம்பெற்றுள்ள சூழ்நிலையில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் எதிர்கால பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து அவர் இலங்கையின் உயர்மட்ட பிரமுகர்களுடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Related posts

4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய வசந்த கரன்னாகொட

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்-உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவை