சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் குறித்த நபர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட போது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 05 ஆண்டுகளில் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற முதலாவது இலங்கையர்கள் குழு இதுவென்பதுடன், 2013ம் ஆண்டு முதல் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்ற 186 பேர் இதுவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

அனைத்து மருந்தகங்களை உடனடியாக மூடுமாறு அறிவித்தல்

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமனம்!

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு