சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க நாளைய தினம் வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சந்தேகநபரை நளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் இனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக கருத்துக்களை பரிமாறியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமர் மாலைத்தீவு விஜயம்

சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ