சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை அடிப்படையற்றது: முசலி பிரதேச சபை ஏகமனதான கண்டனத் தீர்மானம்!

(UTV|COLOMBO) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும்  அதனை  முசலி பிரதேச சபை வன்மையாக கண்டிப்பதாகவும் முசலி பிரதேச சபையில்  கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக இன்று (28) நிறைவேற்றப்பட்டது. முசலி பிரதேச சபையின் தவிசாளர் சுபியானால் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின் போதே  இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்திற்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,தமிழ் தேசிய கூட்டமைப்பு,பொதுஜன பெரமுன , ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி , நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆதரவளித்ததனால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

 

 

Related posts

தனியார் மருத்தவ சேவைகள் சிலவற்றுக்கான வெட் வரி நீக்கம்

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்