சூடான செய்திகள் 1

இருபத்தியொரு மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

(UTV|COLOMBO)  இன்று (24)  திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் திடீரென காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரிப்பு மற்றும் கொப்பழங்கள் கை மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்பட்டதை தொடர்ந்து இம்மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரியில் குறித்த வகுப்பறையை பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா

மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசியலை புகுத்த அரசாங்கம் முயற்சி : நாமல் ராஜபக்ச

Dilshad

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21)