சூடான செய்திகள் 1

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டது

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் பூர்த்தி செய்ய முடியாமல் போன பாடங்களை நிவர்த்திப்பதற்காக பாடசாலை மட்டத்தில் பொருத்தமான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.

மேற்படி எந்த நிலைமையிலும் தவணைப் பரீட்சையை ரத்துச் செய்ய வேண்டாமென அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க கேட்டுள்ளார்.

அதே வேளை பாடவிதானங்களை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை வகுக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Related posts

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் பிணை

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோள்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறிய நற்செய்தி என்ன? முழு உரை தமிழ் வடிவில்