வகைப்படுத்தப்படாத

நியூஸிலாந்து தாக்குதல்தாரி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு!!

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி கிரைஸ்ட்சேர்ச் (Christchurch) மதவழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளியான Brenton Tarrant மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், குற்றவாளி மீது ஏற்கனவே 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி நியூஸிலாந்தில் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இது கருதப்படுகின்றது.

 

 

 

 

Related posts

கடும் நிபந்தனைகளுக்கமைய இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ள தீர்மானம்!

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

Water cut for several areas on Friday