சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம் நாளை

(UTV|COLOMBO) நாளைய தினம் (19)  திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் மாலை 4.00 மணிக்கு இராணுவ வீரர்களின் நினைவு தினம் பாராளுமன்ற  மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 யுத்தத்தில் உயிரிழந்த முப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோரை நினைவுகூர்ந்து, நாளைய தினம் விளக்கேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
இதற்கமைய, மதத் தளங்கள், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், முப்படையினரின் முகாம்கள், காவல்துறை நிலையங்கள் மற்றும் பொது மக்களின் வீடுகள் என்பனவற்றில் பிற்பகல் 7 மணிக்கு விளக்கேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ? நாடுதிரும்பும் ஜனாதிபதிக்கு அதிகரிக்கப்பட்ட அதிரடி பாதுகாப்பு

பாராளுமன்றம் இன்று(27) கூடுகிறது

பொய்யான பிரசாரங்களால் நற்பெயருக்கு அபகீர்த்தி! நூறு மில்லியன் கோருகிறார் அமைச்சர் ரிஷாட்…