சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல் , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

Related posts

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறித்த வெளியான தகவல்கள்

editor

ஹஜ் விவகார சர்ச்சை : திங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு