சூடான செய்திகள் 1

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது அல்லது அவர்கள் தற்போது உயிருடன் இல்லை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் உயிரிழந்து அல்லது கைது செய்யப்பட்டு இருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

மேற்படி பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் பொதுமக்களின் வாழ்க்கை படிப்படியாக வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாக்கப்படுவதாகவும், அவற்றை நம்பி செயற்பட வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

மாக்கும்புர போக்குவரத்து நிலையத்துடன் இணைந்த ரயில் நிலையம் திறப்பு…