சூடான செய்திகள் 1

இன்று(07) முதல் ஆராதனைகளுக்காக திறக்கப்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான, ​கொழும்பு- கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமானது, ஆராதனைகளுக்காக மீண்டும் இன்று(07) முதல் திறக்கப்படுவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணிவரை ஆராதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், திருப்பலி பூஜைகள் இடம்பெறாது என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

எனவே தேவாலயத்துக்கு வருகைத் தருபவர்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

வெளிநாட்டில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது