கிசு கிசு

126 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நேபாள பெண்! (VIDEO)

(UTV|NEPAL) நேபாளைச் சேர்ந்த பெண் ஒருவர் தனி ஆளாக, 126 மணி நேரம் நடனமாடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக, இந்திய பெண்ணின் கின்னஸ் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்ற பெண், கடந்த 2011ம் ஆண்டு நீண்ட நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தார். அவர் 123 மணி நேரம் 15 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடி உலக சாதனை படைத்தார். இவர் கேரள பாடல்களுக்கு மோகினியாட்டம் ஆடினார்.

அவரது கின்னஸ் சாதனையை நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டானா நேபாள் என்ற பெண் முறியடித்து, கின்னஸில் இடம்பெற்றுள்ளார். இவர், நேபாள் பாடல்களுக்கு 126 மணி நேரங்கள் தொடர்ந்து தனியாக நடமாடியுள்ளார். இவருக்கு வயது 18.

 

Related image

Related image

 

 

Related posts

2019 ஐ மறந்துவிடாதே – 2020 இல் தொடர்ந்து இருங்கள் [VIDEO]

திரையரங்குகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம்

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு?