கிசு கிசு

இலங்கைக்கு சமூக வலைத்தளங்கள் முழுமையாக இல்லாமல் போகும் நிலையா?

(UTV|COLOMBO) இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உள்ளதாக இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இப்போது  நடைமுறையிலுள்ள பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கவில்லை என்றால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடு பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஆகையால் அந்த நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு சேவை வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்

ஹர்பஜனுக்கு அகவை 40

தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் மியன்மாருக்காக உருகும் அழகி